செவ்வாய், 13 பிப்ரவரி, 2024

சிவமடக்கு வெண்பா

நஞ்சிவனை நாடாது நங்கை யமுதுசெய்ய வஞ்சுதலை யார்க்கில்லை கூறு - கடைந்தெடுத்த நஞ்சிவனை நாடாது நங்கை யமுதுசெய்ய வஞ்சுதலை யார்க்கில்லை கூறு

படம் 

 

நம் சிவனை நாடாது நம் கை அமுது செய்ய அஞ்சுதல் ஐ ஆர்க்கு இல்லை கூறு - கடைந்து எடுத்த நஞ்சு இவனை நாடாது நங்கை அமுதுசெய்ய அஞ்சு தலையார்க்கு இல்லை கூறு

சிவபெருமானை வணங்காது உணவு உண்டால் ( அமுது செய்தால் அவர்க்கு அர்ப்பணிக்காமல்) அஞ்சுதலும் ஐயமும் யார்க்கு தான் இராது? நமது எல்லா செயல்களும் இறைவனுக்கே சமர்ப்பிக்க வேண்டும் என்பதின் உவமையாக நைவேத்தியம் படைத்தல் கூறப் பட்டுள்ளது.

(பாற்கட்லில்) கடைந்து எடுத்த நஞ்சு இவனை நாடாத வண்ணம் அன்னை அபிராமி அதை அமுதாக மாறச் செய்கின்றாள் , அதனால் அஞ்சு தலையை உடைய சிவபெருமானுக்கு அழிவென்பதே இல்லை

    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி