செவ்வாய், 13 பிப்ரவரி, 2024

அரங்கபுஜங்கம்

 உறங்கா தராமே லுறங்கா துறங்குஞ் 

 சிரங்கா விரிக்கண் கிடந்தா யனந்தா 

 வறங்கா மறங்கா வரம்பே விளங்காத் 

 திருந்தா வினங்கா துரங்கா வரங்கா

 
 
உறங்காது அரா மேல் (ஆதி சேஷன் மேல்) உறங்காது உறங்கும் (யோக நித்திரை கொள்ளும்) சிரம் காவிரிக் கண் (காவிரியை நோக்கி தலை வைத்துக்) கிடந்தாய் (பள்ளிகொண்டாய்) அனந்தா (முடிவற்றவனே)
அறங்கா (அறம் கா) மறம் கா (மறம் கா) வரம்பே விளங்காத் திருந்தா இனம் கா (தனது வரம்புகளையே அறியாத திருந்தாத எமது இழி மனித இனத்தைக் காப்பாயாக) துரங்கா (குதிரைமேல் வரும் கல்கியே) அரங்கனே !
 
படம் 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை கட்டளைக் கலித்துறை

தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற் கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின் ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடை...