திங்கள், 5 பிப்ரவரி, 2024

செவ்வாயிற் செவ்வேள் வெண்பா

செய்யாளி னொய்யார மைதீட்டும் வைவிழி்யா ளையணங்கைக் கைபிடிக்கு மையவனை - மெய்யாரப் பொய்யகலக் கைதொழுகை செய்யாமல் வைதாலு மெய்யருள்வான் மைம்மழையாய்ப் பெய்து #வெண்பா

 படம்

 

செய்யாளின் ஒய்யார மை தீட்டும் வை விழியாள் ஐ அணங்கைக் கை பிடிக்கும் ஐ அவனை மெய்யாரப் பொய் அகல கை தொழுகை செய்யாமல் வைதாலும் மெய் அருள்வான் மை மழையாய் பெய்து 

 

செய்யாள் - இலக்குமி மை மழை - கார்முகில்கள் தரும் மழை அணங்கு - பெண்மகள் / விலங்கின் குட்டி வை விழி - கூர்மையான விழி

 

செய்யாளின் ஒய்யார மை தீட்டும் வை விழியாள் ஐ அணங்கு = வள்ளி , இலக்குமி தேவி மானாக ஈன்ற பெண் அவளை கைப்பிடித்த ஐ ( தலைவன் ) அவனை - முருகனை

 

மெய்யார பொய்யகல கைதொழுகை செய்யாமல் வைதாலும் - பொய்யகற்றி முழு அர்ப்பணிப்போடு கைதொழாது வைதாலும் மெய்யருள்வான் மைம்மழையாய்ப் பெய்து - மெய்ப் பொருளான தன்னையே தங்கு தடையின்றி கார்முகில் அளிக்கும் மழைபோல் அருள்வான்   

முருகனை முறையே தொழாது அவனை ஏசினாலும் , அவன் மழைபோல தன்னருளைப் பொழிவான் . என்னே அவன் கருணை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி