அறுசம யத்தை யருந்தவத் தையாள் பவனிலையே
அறுசம யத்தை யருந்தவத் தையாள் பவனிலையே
அறுசம யத்தை யருந்தவத் தையாள் பவனிலையே
அறுசம யத்தை யருந்தவத் தையாள் பவனிலையே
கட்டளைக்கலித்துறை ஏகபாதம்
இதே பாடல் கேள்வியாகவும் விடையாகவும் அமைகின்றது
வினா :-
அறு சமயத்து ஐயர் உந்து அவத்தை ஆள் பவ(ன்) நிலையே
அறு சமயத்தை அருந்து அவத்தை ஆள்பவன் இலையே
அறு சமயத்தை அரும் தவத்தை ஆள்பவன் நிலையே
அறு சமயத்து ஐ அருந்து அவத்து ஐ ஆள்பவன் இலையே
1.
ஆறு சமயத்து ஐயர் ( தலைவர்கள்) உந்து அவத்தை ( அவத்தைகளால் உந்தப் பட்ட ஆட்கள்தாம் பிறப்பு என்ற நிலை அவர்களுக்கு உண்டு என்ற கருத்து ஒவ்வொரு சமயத்தாரும் பிற சமயத்துத் தலைவர்களைப் பற்றி கூறுவர் )
2.
அறு சமயத்தை அருந்தும் அவத்தையை ஒருங்கே ஆள்பவன் இல்லையே ?
3.
அதனால் அறுசமயத்தையம் அருந்தவத்தையம் நிலையே ஆள்வதற்கு
4.
அறு சமயத்தின் ஒரு தலைவனும் அச்சமயங்களை அருந்தும் அவத்தை அழகாக ஆள்வதற்கு இல்லை என்பதே
கருத்தாக முன்வைக்கப் படுகின்றது
இப்போது விடை அதே பாடலின் வாயிலாக :-
அறு சமயத்தை அருந்தவத்தை ஆள்பவன் நிலையே
அறு சமயத்து ஐ அருந்து அவத்தை ஆள் பவ நிலையை
அறு சமயத்து ஐ அரும் தவ(த்) தை ஆள்பவன் நிலையே
அறு சமயத்தை அருந்தவத்தை ஆள்பவன் இல்லையே ?
1.
அறு சமயத்தையும் அருந்தவத்தையும் நிலையே ஆள்பவன்
2
அறு சமயத்தின் தலைவனாக அது அருந்தும் அவத்தை ஆளும் பவ நிலையை
3
அறு சமய தலைவனான அரும் தவத்திற்கு உரிய தைப் பூசத் திருநாளை நிலையே ஆள்பவனான ( திருமுருகப் பெருமான் )
4.
அவ்வறு சமயத்திற்கும் அருந்தவசிகட்கும் தலைவனாக உள்ளானன்றோ .
விடைப் பாடலில் மூன்றாம் அடியை இவ்வாறு மாற்ற
"அறு சமயத்து ஐ அருந்தவத்தை ஆள்பவன் இலையே" என்று வைத்துக் கொண்டால் ; எதுவுமே அற்ற சமயத்தில் ( ஊழியில்) இலை( ஆலின் ) மேலே அருந்தவம் புரிபவனாக ( வாயில் தனது காலை வைத்து) உள்ள திருமாலைக் குறிக்கும்
அதே வேளை மூன்றாமடியை இவ்வாறு மாற்ற
" அறு சமயத்து ஐ அருந்து அவத்தை ( விடத்தை அருந்தி ) ஆள்பவன் நிலையே" எனக் கொண்டால் சிவனைக் குறிக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக