வெள்ளி, 9 பிப்ரவரி, 2024

அபிராமி கலித்துறை

ஈடற்ற நேசத் திறைவி அனைத்துயி ரீன்றவளே காடுற்ற வீசற் கடுநஞ் சமுதாக்குங் கற்பகமே ஏடற்ற வேத மிசைக்கு முனது கழலிணையே தோடுற்ற தேவி துணைவர வேதுந் துயரிலையே #கட்டளைக்கலித்துறை

 

ஈடு அற்ற நேசத்து இறைவி அனைத்து உயிர் ஈன்றவளே
காடு உற்ற ஈசன் கடும் நஞ்சு அமுது ஆக்கும் கற்பகமே
ஏடு அற்ற வீதம் இசைக்கும் உனது கழல் இணையே
தோடு உற்ற தேவி துணை வர ஏதும் துயர் இல்லையே 

படம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி