வெள்ளி, 9 பிப்ரவரி, 2024

அபிராமி மடக்கு வெண்பா

கதியென வேத்தி கழற்றொழுவார்க் காக்க மதியென வானிற்குந் தோடு - பதியே கதியென வேத்தி கழற்றொழுவார்க் காக்க மதியென வானிற்குந் தோடு #வெண்பா

 

கதி என ஏத்தி கழல் தொழுவார்க் காக்க மதி என வான் நிற்கும் தோடு - பதியே கதி என வேத்தி கழல் தொழுவார்க் காக்க மதி என ஆன் நிற்கு உந்தோடு

 

( நீயே) கதி என ஏத்தி கழல் தொழுவாரைக் காக்க மதி என வான் நிற்கும் தோடு ( உனது)- அபிராமி பட்டர் சரிதம் கதி என வேத்தி கழல் தொழுவரைக் காக்க - அபிராமியே கதி என அவளது கழலைத் தொழுவரைக் காக்க
 

பதியே மதி என ஆன் நிற்கு உந்தோடு - சிவபெருமானே ( உடனாக) நிலவைப் போன்ற வெண்மையான நிற்கும் இடப வாகனத்தில் (வருவார்)

படம்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உரங்கமீது பள்ளி எழு சீர் விருத்தம்

உரங்கமீது பள்ளிகொண் டுறங்குமாதி தேவநின் றரங்கம்வீசு மோதிமேற் றிரங்களாளு பாங்கினை  யிரங்குமன்பின் வண்ணமா யிறங்கிவந்து பூதலத் தரங்கமாளு நீர்மை...