புதன், 7 பிப்ரவரி, 2024

கருமான் மருமான் வெண்பா

முயக்கின் றிளைப்பு முனைப்புப் பயக்கு
மயக்கும் விலக்கின் மகிழ்வான் - மயக்கு
முருமான் விரும்பு முகந்தாள் பணிசெய்
கருமான் மருமான் கனிந்து
#வெண்பா 

முருகனை வழிபட்ட ராமர் | rama worship murugan

முயக்கின் திளைப்பு முனைப்புப் பயக்கும்
மயக்கும் விலக்கின் மகிழ்வான் மயக்கும்
உருமான் விரும்பும் உகந்தாள் பணிசெய்
கருமால் மருமான் கனிந்து


முயக்கின் திளைப்பு முனைப்புப் பயக்கும்
மயக்கும் விலக்கின்- முயக்கத்தினால் வரும் திளைப்பும் முனைப்பு பயக்கும் மயக்கும் விலக்கினால் ( நாம் )

மயக்கும் உருமான் விரும்பும் உகந்தாள் பணிசெய்
கருமால் மருமான் மகிழ்வான் கனிந்து-
மானை விரும்பிய  உகந்தவளான சீதை பிராட்டியின் (அது மயக்கத் தோற்றத்தின் மாரீசன் மானுரு பூண்டது தெரியாமல்)  பணி செய்யும் கரிய நிறமுடைய இராமன் (திருமாலின்) மருகனான முருகன் கனிந்து மகிழ்வான் நம்மிடம்

நாமே முனைந்து செய்கிறோம் என்ற மயக்கமம்  ( எல்லாம் அவன் அருளால் நிகழ்கிறது என்று அறியாமல்)
முயக்கத்தின் திளைப்பின் மயக்கமும் விலக முருகப்பெருமான் நம்மிடம் கனிந்து மகிழ்வான் என்பது கருத்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி