செவ்வாய், 6 பிப்ரவரி, 2024

வேலவன் வெண்பா

முப்புரமும் வெப்பெரிய மூரலிட்ட வொப்பரிய அப்பணிவோ னப்பனென வானதனாற் - செப்பரிய புன்னகையைச் சீறிவரும் போரினிலு மாண்டுவப்பாய் மன்னுபுகழ் வள்ளியம்மை வேந்து #வெண்பா

 

முப்புரமும் வெப்பு எரிய மூரலிட்ட ஒப்பரிய அப்பு அணிவோன் அப்பன் என ஆனதனால் செப்பரிய புன்னகையைச் சீறி வரும் போரினிலும் ஆண்டு உவப்பாய் மன்னு புகழ் வள்ளி யம்மை வேந்து

முப்புரமும் தனது சிரிப்பினால் எரிமூட்டிய ஒப்பரிய கங்கை அணிவோனை தகப்பனாக கொண்டதால் , விவரிக்க முடியாத புன்சிரிப்பை ஆண்டு உவப்பாய் நீ (எதிரிகள்) போரினில் உன்னை எதிர்த்து சீறிவந்தாலும் நிலைத்த புகழுடைய வள்ளியம்மையின் நாயகனே முருகா

படம்   

 படம்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி