வியாழன், 8 பிப்ரவரி, 2024

முருக மடக்கு வெண்பா

கரியா னனத்தான் கனலான் றுதித்தா
னுருமா வகுத்த துறவு - முருகன்
கரியா னனத்தான் கனலான் றுதித்தா
னுருமா வகுத்த துறவு
#வெண்பா 



கரி ஆனனத்தான் கனல் ஆன்று உதித்தான்
உரு மா வகுத்தது உறவு - முருகன்
கரியான் அனத்தான் கனலான் துதித்தான்
உரு மா வகுத்த துறவு

கரி ஆனனத்தான் கனல் ஆன்று உதித்தான்
உரு மா வகுத்தது உறவு - கணபதி முருகன் இருவருக்கும் உள்ள உறவை ஒரு அழகிய மாங்கனி பிளவு படுத்தியது.

கரியான் அனத்தான் கனலான் துதித்தான் முருகன் உரு மா வகுத்த துறவு-

கரிய நிறம் கொண்ட திருமாலும் அ(ன்)னத்தை வாகனமாக கொண்ட பிரமனும் தீப் பிழம்பின் வடிவாய் உள்ள சிவனும் போற்றினர் முருகனை மாமர உருவில் நின்ற சூரனை எவ்வாறு கூறிட்டான் அனைத்தையும் துறந்து ( இது ஒன்றே குறியாக உலகமுய்யும் பொருட்டு) என்று

கரி ஆனனத்தான் - கஜானனன் , கணபதி
கனல் ஆன்று உதிதத்தான் - சிவபெருமானின் தீப்பொறியில் உதித்த முருகன்
கரியான் - திருமால்
அனத்தான்- (அன்னத்தான்) அன்னத்தை வாகனமாக கொண்ட நான்முகன்
கனலான் - தீப்பிழம்பின் வடிவம் கொண்ட சிவன்
உரு- உருவம் , அழகு
மா - மாமரம் , மாங்கனி
வகுத்த -  கூறிட்ட    

Story of the Two Mangoes - Stories that Wrote Tradition | Milaap

The Triumph of Good Over Evil: The Story of Lord Murugan's Battles | Astro  Ulagam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை கட்டளைக் கலித்துறை

தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற் கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின் ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடை...