செவ்வாய், 13 பிப்ரவரி, 2024

செவ்வாயிற் செவ்வேள்

அரக்கர்க் கிரக்கந் துறக்கச் செருந்தே நரர்க்குஞ் சுரர்க்குஞ் சிறக்கப் பொழிந்தா யரர்க்குப் பகர்ந்த வனைக்கும் பகர்ந்த விருந்தை முனிக்கும் பகர்ந்தாய் சிறந்தே

#கலிவிருத்தம்  

 

 Image result for Murugan

 

அரக்க ரழிக்கு மரியின் மருகா இரக்கக் குணத்தோ யுமையின் புதல்வா சிறந்த வரந்தரு மீசர் குமரா மறந்து மறவே னுனை 

#வெண்பா 

 

அரக்க ரழிக்கு மரியின் மருகா
இரக்கக் குணத்தோ யுமையின் புதல்வா
உரக்க வுரைப்பே னுனபேர் தினமும்
எருக்கைக் குரைத்த விறை

 #வெண்பா

 

அரக்க ரழிக்கு மரியின் மருகா
இரக்கக் குணத்தோ யுமையின் புதல்வா
உரக்க வுரைப்பே னுனபே ருருகிச்
செருக்கைச் சிதைத்துத் தினம் 

 #வெண்பா

 எருக்கை - எருக்கு ஐ - சிவபெருமான்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி