வெள்ளி, 9 பிப்ரவரி, 2024

திருமங்கையாழ்வார் கலித்துறை

திருமங்கை யாண்ட திருகங்கை பாதன் றிருவருளாற்    
றிருமங்கை யென்ன திருமங்கை யாண்ட திருவழகன்
றிருமங்கை யாண்ட திருமங்கை யாழ்வான் தனையொருநற்  
றிருமங்கை யென்றே திருமாலை யாண்டான் றிருமடலே 

#கட்டளைக்கலித்துறை 

திருமங்கை ஆழ்வார் | guruparamparai thamizh

திருமங்கை ஆண்ட திருகங்கை பாத்தான் திருவருளால்
திருமங்கை என்ன திருமங்கை ஆண்ட திருவழகன்
திருமங்கை ஆண்ட திருமங்கை ஆழ்வான் தனை ஒரு நல்
திருமங்கை என்றே திருமாலை ஆண்டான் திருமடலே

திருமகளை ஆளும் திருகங்கையை பாதமாக உடைய திருமாலின் திருவருளால்
திருமகளைப் போல சர்வ லக்ஷணங்களும் பொருந்திய குமுதவல்லித் தாயாரை ஆளும்
திருவழகனான திருமங்கை எனும் ஊரை ஆண்ட திருமங்கை ஆழ்வான் தன்னை
ஒரு நல்ல திருமங்கை என்று பாவித்து திருமாலுக்குத்  திருமடல் எழுதினார் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி