வெள்ளி, 9 பிப்ரவரி, 2024

இராம யமக வெண்பா

திருவிலங்கை மாய திருவிலங்கை யாளும் பெருவிலங்கை மாய்பான் பிறப்பு - செருவிற் திருவிலங்கை மாய திருவிலங்கை யாளும் பெருவிலங்கை மாய்பான் பிறப்பு #வெண்பா

 

திரு இலங்கை மாய திரு விலங்கை ஆளும் பெரு இலங்கு ஐ மாய்ப்பான் பிறப்பு - செருவில் திரு இலங்கு ஐ மாய(ன்) திரு இலங்கை ஆளும் பெரு விலங்கை மாய்ப்பான் பிறப்பு

இலங்கை எனும் திருநாடு அழியும்படி திருவின் அருள் பெற்ற வானரமான ஆஞ்சநேயரை ஆளும் பெருமை ஒளிரும் தலைவனான ஸ்ரீ ராமன் பிறப்பை ஒழிப்பான் ( முக்தி அளிப்பான்)

திரு இலங்கு ஐ ( திருமகள் என்றுமே அவனது மார்பில் ஒளிர்கினற தலைவனான ) மாயன் இலங்கை எனும் திருநாட்டை ஆளும் பெருவிலங்கை ( பெருமை மிக்கவன் ஆனால் மனிதப் பண்பு இழந்து பிறன் மனையை விழைவு கொண்ட விலங்கான இராவணனை ) கொல்வான் போரில் ( செருவில்)

படம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி