வினையாளும் வாழ்வி லுனைநாடா வீழ
எனைமாள வைக்கா திறைவா - தினையாளுந்
தேவி கணநீங்கா தேவ வுனைப்பாட
ஆவிக் கருடந்தா யாண்டு
வினை ஆளும் வாழ்வில் உனை நாடா வீழ
எனை மாள வைக்காது இறைவா தினை ஆளும்
தேவி கணம் நீங்கா தேவ உன்னைப் பாட
ஆவிக்கு அருள் தந்தாய் ஆண்டு
விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும் பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக