வெள்ளி, 22 மார்ச், 2024

மங்கைக்கோ விருத்தம்

 மாலை அணிந்தளித்த மங்கைக்கோ  
     மார்பி லிடந்தந்த மங்கைக்கோ
பாலஞ் சமைத்துவென்ற மங்கைக்கோ
    பாரின் சுமைதுறந்த மங்கைக்கோ
கோலத் துருவெடுத்த மங்கைக்கோ
    கோபன் மனமுவந்த மங்கைக்கோ
வேலைத் துயில்வளரு மங்கைக்கோ
    வேண்டித் தொழுதுவந்த மங்கைக்கோ 



ஆண்டாளுக்கோ , மஹாலக்ஷ்மிக்கோ , சீதா பிராட்டிக்கோ , பூமா தேவிக்கோ / திரௌபதிக்கோ , பூமா தேவிக்கோ ( பன்றியாக திருமால் அவதாரம் செய்து மீட்டது)  கோபிகையருக்கோ , பாற்கடலில் துயிலும் திருமாலின் உடனமர் தேவிகளுக்கோ திருமங்கை மன்னனான திருமங்கை ஆழவார் தனது துதிகளைப்
 பாடி தொழுது உவந்தது ? - அனைவருக்கும் தான் , அனைத்து மங்கைகளுக்கும் கோனன்றோ ஸ்ரீமன் நாராயணன் , அனைத்து ஜீவாத்மாக்களும் பெண் நாராயணன் ஒருவனே ஆண் என்ற தத்துவமும் சொல்லப் பட்டது

 

படம்படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி