திங்கள், 18 மார்ச், 2024

நாதமுனிக் கட்டளைக்கலித்துறை

நங்கைக் கிடந்தந்த நம்பிப் புகழை நயந்துரைத்த
நங்கைக் கிடந்தந்த நம்பிப் புகழை நயந்துரைத்த
நங்கைக் கிடந்தந்த நம்பிப் புகழை நயந்துரைத்த
நங்கைக் கிடந்தந்த நம்பிப் புகழை நினைமனனே

கட்டளைக்கலித்துறை 




நங்கைக் கிடந்து அந்த நம்பிப் புகழை நயந்து உரைத்த
நங்கைக்கு இடம் தந்த நம்பிப் புகழை நயந்து உரைத்த
நங்கைக்கு இடம் தந்த நம்பிப் புகழை நயந்து உரைத்த
நம் கைக்கு இடம் தந்த நம்பிப் புகழை நினை மனனே

1.
நங்கையான ஆண்டாள் கிடந்து ( தவிப்பில்) அந்த நம்பிப் ( திருமாலின்) புகழை உரைத்த - திருப்பாவை நாச்சியார் திருமொழி

2
நங்கைக்கு இடம் தந்த நம்பிப் புகழை நயந்து உரைத்த - இலக்குமிக்கு தனது மார்பில் இடம் தந்த நம்பி ( திருமாலின்) புகழை உரைத்த ( பொதுவாக அனைத்துத் திவ்யப் பிரபந்தங்களையும் குறிக்கும் எனினும் அடுத்த அடியுடன் சேர்த்து பார்த்தால் நம்மாழ்வாரைக் குறிக்கும் )

3.
நங்கைக்கு இடம் தந்த நம்பிப் புகழை நயந்து உரைத்த - தனக்கு நங்கை என்ற பாவம் ஏற்படுத்திக் கொண்ட திருக்குருகூர் நம்பி அவர்தம் புகழை உரைத்த மதுரகவியாழ்வார் ( கண்ணி நுண் சிறுத்தாம்பு பாசுரங்கள்)

இவையெல்லாம்

4.
நம் கைக்கு இடம் தந்த ( நமக்குக் கிடைக்குமாறு அருளிச்செய்த) நம்பி ( நாதமுனிகள்) புகழை நினை மனனே


நங்கையாகத் தன்னைப் பாவித்துப்   பாசுரங்கள் இயற்றிய ஆழ்வார்களில் பெரியாழ்வார் ( அசோதையாக) திருமங்கையாழவார் ( பரகாலநாயகியாக) நம்மாழவார் ( பராங்குசநாயகியாக) என்று மூவரையும் கொள்ளலாம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை கட்டளைக் கலித்துறை

தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற் கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின் ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடை...