திங்கள், 4 மார்ச், 2024

கண்ணன் கலிவிருத்தம்

 சஞ்சலங்க ளேதுமின்றி சந்ததமுங் காத்திட அஞ்சலின்றி யைவருய்ய வஞ்சகங்கள் செய்தநந் தஞ்சமென்று வந்தவர்க்கு நெஞ்சமர்ந்து காத்திடுங் கஞ்சனெஞ்சிற் றீயைவைத்த கண்ணனென்றும் வாழியே

#கலிவிருத்தம் 

 

சஞ்சலங்கள் ஏதும் இன்றி சந்ததமும் காத்திட அஞ்சலின்றி ஐவர் உய்ய வஞ்சகங்கள் செய்த நம் தஞ்சம் என்று வந்தவர்க்கு நெஞ்சு அமர்ந்து காத்திடும் கஞ்சன் நெஞ்சில் தீயை வைத்த கண்ணன் என்றும் வாழியே

படம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி