புதன், 3 ஏப்ரல், 2024

மாலவதார வொப்பீடு வெண்பா

மாதுறையு மார்பழகன் மாதரியா யன்றுவந்த மாதறியா தேங்கவைக்கு மாமாயன் - யாதொருவர் மாதிரியே கூறவொணா மாதொருத்தி காத்திடவே சேதமுறச் செய்தவனாந் தீவு #வெண்பா

மாது ( இலக்குமி ) உறையும் மார்பழகன் - திருமால் , மாதரி - அழகிய சிங்கர், மாதர் ( கோபிகையர்)தன்னை அறியாது ஏங்கவைத்த மாமாயன் - கண்ணன் , எனினும் யாதொருவராலு மாதிரியே கூறவொணா , மாதொருத்திக்காகத் ( சீதை) தென்னிலங்கையைச் சேதமுறச் செய்த தன்னிகரிலிப் பிரான் இராமன் 

 

படம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி