புதன், 3 ஏப்ரல், 2024

மாறன் மடக்கு வெண்பா

மாறான் முழுமுதற் றெய்வமெனப் பாட்டிசைத்த மாறன் றமிழ்செய்த மாமறையே மாறுதித்த மாறான் முழுமுத றெய்வமெனப் பாட்டிசைத்த மாறன் றமிழ்செய்த மாண்பு

 

 படம்

 

 

 

மால் தான் முழு முதல் தெய்வம் எனப் பாட்டு இசைத்த மாறு உதித்த மாறன் தமிழ் செய்த மா மறையே மாறான் முழு முதல் தெய்வம் என பாட்டிசைத்த மாறு அன்று அமிழ் செய்த மாண்பு

 

திருமால் தான் முழுமுதல் தெய்வம் எனவும் அத்தெய்வம் மாறான் (மாற்றம் இல்லாதவன்) எனவும் பாட்டிசைத்த மாறுதித்த (பேசாமல் புளியமரத்தடியில் அமர்ந்து ஆழ்தவத்தில் அமர்ந்திருந்த ) மாறன்

(நம்மாழ்வார்) தமிழ் செய்த மாமறையே (வேதத்தின் பொருளைத் தமிழ் செய்த) மாற்றமே அன்றி அமிழ் ( மூழ்கி இலக்கியத்தில், சமயத்தில்) செய்த மாண்பு  

முழுமுதல் ஆகிய தெய்வம் என்று கொண்டால் (எழுவாய்த் தொடர் ) - முழுமுதறெய்வமெனவும்
முழுமுதன்மை பண்பு தெய்வத்தைக் குறிப்பதாக கொடண்டால் முழுமுதற்றெய்வமெனவும் வரும்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி