வியாழன், 18 ஏப்ரல், 2024

செவ்வாயிற் செவ்வேள்

செஞ்சொற் புனைய சிறந்த தமிழிற் றிரையெழுந்த
நஞ்சைக் கழுத்தி னகையா யணியு நடவரசற்
கொஞ்சுப் புதுல்வன் குருவா யமர்ந்த குமரன்றனை
நெஞ்சத் தமர்த்தி நிதமு நிறைய  நிலையருளே

#கட்டளைக்கலித்துறை  

Thiruchendur Murugan - Indian Art (3.5 ... 

செஞ்சொல் புனைய சிறந்த தமிழில் திரை எழுந்த
நஞ்சைக் கழுத்தில் நகையாய் அணியும் நடவரசன்
கொஞ்சுப் புதல்வன் குருவாய் அமர்ந்த குமரன் தனை
நெஞ்சத்து அமர்த்தி நி(த்)தமும் நிறைய நிலை அருளே  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி