சனி, 27 ஏப்ரல், 2024

முழுமோனை மாருதி வெண்பா

செருவிலங்கை செற்ற திருவிலங்குந் தேவற் கொருவிலங்கை யூர்தியா யோங்கு மிருவிலங்க லேந்தி யிறையிருவ ரேல விடம்பெயர்த்த நாந்தொழவே நன்றாகு நாள் #வெண்பா

 

செரு இலங்கை செற்ற திரு இலங்கும் தேவன்(கு) ஊர்தியாய் ஓங்கும் இரு (பெருமைமிகு) விலங்கல் (சஞ்சீவினி மலையை) ஏந்தி இறை இருவர் ஏல இடம்பெயர்த்த ஒரு விலங்கை நாம் தொழவே நன்றாகும் நாள்

செருவிலங்கை செற்ற திருவிலங்குந் தேவற்கு - போரில் இலங்கையைச் செற்ற திரு இலங்கும் தேவனான இராமற்கு

யூர்தியா யோங்கு மிருவிலங்க லேந்தி யிறையிருவ ரேல விடம்பெயர்த்த ஒருவிலங்கை - ஊர்தியாக ஓங்கும் , இறையிருவர் (இராம இலக்குவர்) விழித்தெழ பெருமைமிகு மலையை ஏந்தி இடம்பெயர்த்த ஒப்பற்ற வானரத்தை (ஆஞ்சநேயரை) நாந்தொழவே நன்றாகு நாள் - நாள் நன்றாகும் நாம் அவரைத் தொழவே

படம்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி