திங்கள், 29 ஏப்ரல், 2024

கந்தன் கலித்துறை

மலைத்தே னனைய மலைத்தே விருக்க மலைமலையா யலைத்தே திரிந்து மலுப்பே துமில்லை யலைக்கரையின் றலைத்தே வழைக்கத் தலைத்தேவை சென்று தலைவணங்க னிலத்தே நிலைக்க நிலைத்தே நினைப்பி னிலைமனனே #கட்டளைக்கலித்துறை

மலைத்தேன் அனைய மலைத்தேவு இருக்க மலை மலையாய் அலைத்தே (அலைந்தே) திரிந்தும் அலுப்பேதும் இல்லை அலைக்கரையின் தலைத்தே அழைக்கத் தலைத் தேவை சென்று தலைவணங்கல் நிலத்தே நிலைக்க நிலைத் தே நினைப்பில் நிலை மனமே 

மலைத்தேன் போல இனிப்பாய் மலைத்தேவனான முருகன் உள்ளதால் மலை மலையாக அலைந்து திரிந்து அவனைக் காண சென்ற போதிலும் அலுப்பு இல்லை ! அலைக்கரையின் தலைத்தே (திருச்செந்தில் ஆண்டவன்) அழைக்க (நம்மை) நமது தலைத்தேவை (தலையாய கடமை) அவனைச் சென்று தலைவணங்குதல் ,

 இந்நிலத்தே நிலைக்க (நாம்) என்றும் நிலைத்திருக்கும் தேவனான முருகனின் நினைப்பில் நமது மனங்கள் நிலைத்து நிற்கட்டும் 

படம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி