மறைந்திருந்து வானரத் தழித்தவேத நாயகன்
மனங்கவர்ந்து மாதரை மயக்குமாயர் காவலன்
கரந்துவந்து மாவலிக் களித்தபாத வாமனன் மருகோனே
உறைந்துநின்ற வானவர் கலைக்கவெண்ணி யாடவம்
மறைந்துநின்று மாரனை மலர்க்கணைக ளேவியே
சினந்தெழுந்து தீவிழித் தெரித்தகாம னீசனார் தவபாலா
மறைந்ததிங்க ணாளிலே மகற்சொலுக்கி ணங்கவே
யணிந்ததோடை வானிலே யளித்துவந்த வார்நிலா
நிறைந்தவான மாகவே வணங்குதேவ தேவியின் குமரேசா
மறந்திருந்த பத்தனின் மனந்திருத்து மாசிலா
விரைந்துவந்து தோகைமேல் விழித்திருக்க மோனமாய்
பறந்திலங்கு நாதனே சிறந்தவள்ளி பாகனே அருளாயோ
"கரண்டமாடு பொய்கையுள் " என்ற திருச்சந்த விருத்தத்தின் சந்தத்தை தழுவிய பாடல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக