புதன், 22 மே, 2024

வைகாசி விசைகக் கலித்தாழிசை

தேவானையுதவு தீவானினிலவு மாவாதினடைவு
தேவாரையுதவு தேவானையுறவு மாகேசனறிய
தேவானையுரிய ஞானாசன்கிரியி னாவாரமொழியு
மாவேதவடைவு மூவானைநினைவு தாவாதுமொழிவ   னே
    



தேவு ஆனை உதவு(ம்) தீ வானின் நிலவு மா வாதின் அடைவு
தேவரை உதவு  தேவானை உறவு மாகேசன் அறிய
தேவானை உரிய ஞானாசான் கிரியில் நாவார மொழியும்
மா வேத அடைவு மூவானை நினைவு தாவாது மொழிவனே   

பிள்ளையார் உதவி புரியும், தீ ஒளிரும் வானில் நிலவும் மாபெரும் போரின் அடைவாக தேவர்களை உதவும் , தேவானையின் உறவான , ஐராவதம் என்னும் ஆனையை வாகனமாய்க் கொண்ட , சுவாமி மலையில் மகேசனாரறிய, மாவேதத்தின் அடைவான பிரணவத்தை, நாவார மொழிந்த, மூப்பில்லானை நினைவில் என்றும் அழியாது பாடிக்கொண்டே இருப்பேன் 

படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி