வியாழன், 23 மே, 2024

மாதவன் மாறன் சிலேடை வெண்பா

மாமகிழ் மாறன் மதுரமொழி யாயிரம் பாமகிழ்ந் தோதுவர் பார்முழுது - நாமகி ழன்னையா யத்தனா யாண்டுவக்குந் தென்குருகூர் மன்னனு மாதவனு மொன்று #வெண்பா

 திருமால் மற்றும் நம்மாழ்வாரின் மீது சிலேடையாய் எழுதப்பட்ட பாடல் 

பொருள் 1 :

 மா மகிழ் மால் தன் மதுறமொழி ஆயிரம் 

பா மகிழ்ந்து ஒதுவர் பாரமுழுதும் நாம் மகிழ் 

அன்னையாய் அத்தனாய் ஆண்டுவுக்கும் தென் குருகூர் 

மன்னனும் மாதவனும் ஒன்று 

 திருமகள் மகிழக் கூடிய திருமாலின் அழகிய ஆயிரம் நாமங்கள் ( விஷ்ணு ஸஹஸ்ரநாமாம் ) எனும் பாடலை இவ்வுலகமே மகிழ்ந்து ஓதும் , நாம் மகிழ நமது தாயாகவும் தந்தையாகவும் ஆண்டு உவப்பான மாதவன் 

பொருள் 2 

மாமகிழ் மாறன் மதுர மொழி ஆயிரம் 

 பா மகிழ்ந்து ஓதுவர் பார் முழுதும் - நாம் மகிழ்

அன்னையாய் அத்தனாய் ஆண்டுவுக்கும் தென் குருகூர் 

மன்னனும் மாதவனும் ஒன்று 

பெருமைக்குரிய மகிழம் பூ மாலையைச் சூட்டிய மாறன் ( நம்மாழ்வார்) இயற்றிய மதுரமொழி ஆயிரம் (திருவாய்மொழியை ) இவ்வுலகே மகிழ்ந்து ஓதும் . நாம் மகிழ நம்மை தாயாகவும் தந்தையாகவும் ஆண்டு உவப்பார் நம்மாழ்வார் ஆதலால் திருமாலும் நம்மாழ்வாரும் நிகரானவர்கள் என்றவாறு 

படம்படம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை கட்டளைக் கலித்துறை

தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற் கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின் ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடை...