செவ்வாய், 21 மே, 2024

செவ்வாயிற் செவ்வேள்

கற்புங் களவுங் கடைபிடிக்குங் கந்தையா வெற்புறை வேந்தே விளங்கொளியே - பொற்புடைப் புன்னகை பூணுமிரு பூவை புடைசூழ்ந்த மன்னவா வாழ்த்தவுனை வாழ்த்து

தீவானை மீளாளத் தேவாரைச் செய்வானைச் சேவானை மாதேவன் றீயானை நோவாமன் மாவாயை நீள்வானின் மருமானைக் கானாடன் தேவானை தேவானைப் பாடாமற் போவேனோ

 

தீ வானை மீள் ஆளத் தேவா(வ)ரைச் செய்வானைச் சே ஆனை மாதேவன் தீ ஆனை நோவாமல் மா வாயை நீள்வானின் மருமானைக் கானாள் தன் தேவானை தேவா(வ)னைப் பாடாமல் போவேனோ 

 

தீ வானை (கதிரவன் ஒளிரும் வானை) மீண்டும் ஆளத் தேவர்களைச் செய்வானை, சே ஆனை (சிவந்தவனை) மாதேவன் தீ ஆனை (சிவனாரின் தீப்பொறியில் உதித்த காளையை) நோவாமல் (எளிதில்) மாவாயைப் பிளந்தவனின் (திருமாலின்) மருமானை, கான் ஆளும் வள்ளி மற்றும் தேவானை தன் தேவனை, முருகனை (நான்)பாடாமல் போவேனோ 

படம் 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எழிலமுதா அறு சீர் விருத்தம் (செவ்வாயிற் செவ்வேள்)

 எழிலமுதா சித்தர்தலைவா வெம்மீசா         விணையிலதோர் வேலேந்து போர்வீரா  குழலினிதே மணம்வீசு மலைமகளின்          குணபாலா மயிலேறு குகநேயா  வழுவறி...