வியாழன், 16 மே, 2024

திருஞான சம்பந்தர் மாலைமாற்று

 காழியா வேதியா வாதவே றாசிதே வாதிதே தேதிவா தேசிறா வேதவா யாதிவே யாழிகா #மாலைமாற்று

 

காழியா வேதியா வாத ஏறு ஆசி தேவாதி தே தேதி வா தேசு இறா வேத வாய் ஆதி வேய் ஆழி கா 

காழியா (சீர்காழிப் பதியானே) வேதியா (அந்தணணே) வாத ஏறு (சமணரை வாதிட்டு வென்ற சிம்மம் என) ஆசி (பெற்ற) தேவாதி தே (தேவா) தேதி வா (எமக்கு காலன் வரும் தேதியில நீ வருவாயாக) தேசு இறா(ஒளி முடியாத)

வேத வாய் (வேத நெறியின் வாயிலாக) ஆதி வேய் ஆழி கா (ஆதியிலிருந்து வேயப் பட்ட இப்பிறப்பிறப்பு எனும் கடலினிருந்து) காப்பாயாக (எம்மை)

படம்   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி