திங்கள், 20 மே, 2024

மாதேகி கட்டளைக்கலித்துறை

மாதேகி வாமன னாமா வலிக்கு மகத்தளித்தாய் மாதேகி வானரத் தூதாண்டுச் செற்றாய் மதிளிலங்கை மாதாகி வானோர்க் கமுதளித் தாயன்று மோகினியா மாதேகி மாயன்றன் மாண்புரைக் காதேது மாதவமே #கட்டளைக்கலித்துறை

 

மா தேகி - பெரிய உடல் கொண்டு மாது ஏகி - மாதைப் பிரிந்து மாது ஆகி - மோஹினி மா தேகி - மஹாலக்‌ஷ்மியை தேகத்தின் ஒரு கூறாகக் கொண்டவனே 

மா தேகி வாமனனா(ய்) மாவலிக்கு மகத்தளித்தாய்
மாது ஏகி வானரத் தூதாண்டுச் செற்றாய் மதிள் இலங்கை
மாதாகி வானோர்க்கு அமுதளித்தாய் அன்று மோகினியா(ய்)
மா தேகி மாயன்றன் மாண்புரைக்காது ஏது மா தவமே 

 

படம்படம்படம்படம் 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி