செவ்வாய், 14 மே, 2024

மாயன் பாவை

தித்திக்கும் வெண்ணெய் திருடுந் திருடனை எத்திக்குத் தேடினு மீடிணை யில்லானைப் புத்திக் ககப்படாப் புண்ணியனை யாதியழை யத்திக்குப் பேறளிக்கு மத்திகிரி யாள்வானை 

 முத்திக்கு மூலவனை மூவா முகுந்தனைப் பத்திக்குப் பேர்போன பண்பாளர்  கோமானைப் பித்துற்ற பேதைபோற் பாடாது போம்வாழ்க்கை வித்துற்ற தேனோ விளம்பேலோ ரெம்பாவாய் 

 படம்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி