செவ்வாய், 14 மே, 2024

இராமானுசர் கலித்துறை

கராவின் பிடியிற் கதறிய வானைக் கருள்புரிய வராவின் பகைமேல் விரைந்தே வருமோ ரரவணையான் பராப ரனென்று பறைசாற்றப் பார்மிசை பாங்குதித்த விராவி னிருணீக் கிரவியா யாளும் யதியரசே #கட்டளைக்கலித்துறை

 

கராவின் பிடியில் கதறிய ஆனைக்கு அருள்புரிய அராவின் பகைமேல் விரைந்தே வரும் ஓர் அரவு அணையான் பராபரன் என்று பறைசாற்றப் பார் மிசை பாங்கு உதித்த இராவின் இருள் நீக்கு இரவியாய் ஆளும் யதி அரசே 

படம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி