திங்கள், 27 மே, 2024

செவ்வாயிற் செவ்வேள் வெண்பா

கிளிப்பாவைக் கேட்குங் கிழவன் குமர னளிப்பார்வை நம்மே லணுக -விளிப்போங் களிப்போ டவன்மேல் கவியை யிதுவே யுளத்தூய்மைக் கான்ற வழி

 கிளிப் பாவை கேட்கும் கிழவன் குமரன் 

அளிப் பார்வை நம் மேல் அணுக விளிப்போம் 

களிப்போடு அவன் மேல் கவியை இதுவே 

உளத் தூய்மைக்கு ஆன்ற வழி 

 படம்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி