செவ்வாய், 28 மே, 2024

கனியென்று இனிக்கும் கழல்

இவையா வுலகளந்த வீடிலாப் பாத மிவையா பணிநடித்த வேற்ற - மிவையா முனிபலர் காண முனையு மடிகள் கனியென் றினிக்குங் கழல் #வெண்பா

இவையா உலகு அளந்த ஈடு இல்லா பாதம் இவையா பணி நடித்த ஏற்றம் இவையா முனி பலர் காண முனையும் அடிகள் கனியென்று இனிக்கும் கழல்

அசோதையின் கூற்று :-
இக்கால்கள் உலகங்கள் யாவும் அளந்த பாதங்களா , இவைதான் காளிங்கன் தலைமீதேறி நாட்டியம் ஆடினவா , இவைதான் பல முனிவர்களும் காண தவமியற்றி முனையும் இலக்கா? அன்று , இவை கனிபோன்ற இனிக்கும் எனது குழந்தையின் பாதம் !

 


 

 

 

 

 

படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அங்கிசேர் அறுசீர் மண்டிலம்

அங்கிசேர் பொறியா முக்கண்           அங்கிசேர் சான விக்கண்  தங்குசீர் கிரண மாறுஞ்          சண்முகத் தேவாய்த் தோன்று  மங்குதீர் நிச்ச லன்றன்   ...