அம்மானை யொத்தத் திருமேனி கொண்ட
வம்மானை யொத்தத்த் திருநாமஞ் சாத்தி
யம்மானை யொத்த வழகழியா வேந்தே
செம்மானின் செல்வி குறமாதி னாதா
செம்மானே சேவற் கொடியாளும் வேலா
உம்மாணைக் காக வுருகுவதே வாழ்விப்
பெம்மானைக் காணப் பிணியேது முண்டோ
வெம்மானை யென்று மிசைவதுதா னாவே
-எண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
அம்மானை ஒத்தத் திருமேனி கொண்ட
அம்மானை ஓத்தத் திரு நாமம் சாத்தி
அம்மானை ஒத்த அழகு அழியா வேந்தே
செம்மனின் செல்வி குற மாதின் நாதா
செம் மானே சேவல் கொடி ஆளும் வேலா
உம் ஆணைக்கு ஆக உருகுவதே வாழ்வு
இப் பெம்மானைக் காணப் பிணி ஏதும் உண்டோ
எம் மானை என்றும் இசைவது தான் நாவே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக