வெள்ளி, 3 மே, 2024

குருவாரக் குமரன் வெண்பா

குருவாரஞ் சென்று குருபரனைக் காணத் தருவானா ஞானந் தருவாய்ச் - செருநாதன் மஞ்ச ளலங்கார மங்கலந் தான்றருமே சஞ்சலஞ் சாரா தகம் #வெண்பா

 

குருவாரம் சென்று குரு பரனைக் காணத் தருவானாம் ஞானம் தருவாய் செரு நாதன் மஞ்சள் அலங்காரம் மங்கலம் தான் தருமே சஞ்சலம் சாராது அகம் 

குருவாரம் - வியாழக் கிழமை தரு - கற்பக மரம் செரு - போர் அகம்- மனது

படம்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி