வெள்ளி, 3 மே, 2024

ஆசிரியப்பா

மாற்றான் றார மாண்பி றிருட
கூற்றாங் கருணைக் கடலுந் தேற்றா
வறமில் கல்வி யணுத்துணை
திறமில் லாயினுந் திருவரு ணாடே
#ஆசிரியப்பா 

 

 மாற்றான் தாரம் மாண்பு இல் திருட
கூற்றாம் கருணைக் கடலும் தேற்றா
அறம் இல் கல்வி அணுத் துணை
திறம் இல் ஆயினும் திருவருள் நாடே

மாற்றான் மனைவியை மாண்பின்றி திருடினால் கருணைக் கடலான இராமர் கூட கூற்றாவார்! அறம் இல்லாத கல்வி அணு அளவும் தேற்றாது ( அதனால்) திறம் இல்லை என்றாலும் தாழ்வில்லை , திருவருளை நாடுவதே செய்ய வேண்டியது என்றவாறு 

King Ravana - TemplePurohit - Your Spiritual Destination | Bhakti, Shraddha  Aur AshirwadWhy did Ravana agree to be the priest for Ram's puja during the war? - Quora

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை கட்டளைக் கலித்துறை

தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற் கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின் ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடை...