திங்கள், 6 மே, 2024

இன்றமிழ் வேலவன் வெண்பா

தினையரசி தெய்வானை சேர்ந்திருக்குந் தேவ வினையகற்றும் வேழமுகன் வேண்டு - மினியகனி யீசனுமை யீய விடம்பெயர்ந்த வின்றமிழி னேசவுனை நேர்ந்துரைப்பே ணீண்டு #வெண்பா

தினையரசி தெய்வானை சேர்ந்து இருக்கும் தேவ வினை அகற்றும் வேழமுகன் வேண்டும் இனிய கனி ஈசன் உமை ஈய இடம் பெயர்ந்த இன் தமிழின் நேச உனை நேர்ந்து உரைப்பேன் நீண்டு

தினையரசியான வள்ளியம்மையும் தெய்வானையும் என்றும் சேர்ந்திருக்கும் தேவனே , வினையகற்றும் ஆனைமுகன் வேண்டும் இனிய கனியை (ஞானப் பழத்தை) ஈந்தனர் ஈசனும் உமையம்மையும் , அதனால் சினம்கொண்டு இடம்பெயர்ந்த இன் தமிழின் நேசா (அதனால் தான் பழனி வந்தனை!) உன்னை நேர்ந்து உரைப்பேன் நீண்டு

படம் 

படம் 

  

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி