செவ்வாய், 14 மே, 2024

ஆதி சங்கரர் கலித்துறை

இரண்டல வென்ற விறைமெய் யியலை யினிதுரைக்க முரண்பல வென்று முழுமுத லொன்றேயிங் குள்ளதெனத் திரன்பட வாதிட்டுத் தேர்ந்து நிறுவ செகதலத்தி லரன்பெயர் கொண்ட வதரித்த காலடி மாமுநியே #கட்டளைக்கலித்துறை

படம் 

இரண்டல்ல என்ற இறை மெய் இயலை இனிது உரைக்க முரண் பல வென்று முழுமுதல் ஒன்றே இங்கு உள்ளதெனத் திரன்பட வாதிட்டுத் தேர்ந்து நிறுவ செகதலத்தில் அரன்பெயர் கொண்டு அவதரித்த காலடி மா முனியே 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி