செவ்வாய், 14 மே, 2024

சங்கரரிராமாநுசர் சிலேடை வெண்பா

சிறப்பத் துவிதந் திருநாட்டி லோங்க பிறப்பெடுத்தார் தென்னாட்டின் பேறே - இறைப்பா மதிராசர் தேர்ந்த வடமொழி மேதை யெதிராசர் சங்கர ரீடு

சிறப்பு அத்துவிதம் திரு நாட்டில் ஓங்க பிறப்பு எடுத்தார் தென்னாட்டின் பேறே - இறைப்பா மதி ராசர் தேர்ந்த வடமொழி மேதை எதிராசர் சங்கரர் ஈடு

பொருள் 1 சிறப்பான அத்துவிதம் என்னும் தத்துவத்தைத் ( பாரத) திரு நாட்டில் ஓங்கும் படிச் செய்ய பிறப்பு எடுத்தார் தென்னாட்டின் பேறாக விளங்குபவர் ( காலடியில்) இறைவனைப் பாற்றிய பா இயற்றுவதில் மதியின் அரசர் மற்றும் வடமொழியில் தேர்ந்த மேதையும் ஆம் ( ஆதி சங்கரர்)

பொருள் 2 சிறப்பு அத்துவிதம் ( விசிஷ்டாத்வைதம்) என்னும் தத்துவத்தைப் பாரத திரு நாட்டில் ஓங்கச் செய்யப் பிறப்பெடுத்தார் தென்னாட்டின் பேறாக ( பெரும்புதூரில்) இறைப்பாவில் மதியரசர் வடமொழியில் தேர்ந்த மேதை (இராமானுசர்)  படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை கட்டளைக் கலித்துறை

தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற் கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின் ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடை...