வியாழன், 13 ஜூன், 2024

அபிராமி கட்டளைக் கலித்துறை

கூத்தாடுங் கோனிடக் கூறாளைக் கோழிக் கொடியுடையோ
னாத்தாளை யாழிவா ழாழியா னன்பிளை யந்தரியைக்
காத்தாளக் காருவா காணக் கனிநிலா காதணியை
யீத்தாளை யீடி லிறைவியை யேத்தாழ்ந் திசையிதுவே
 

#கட்டளைக்கலித்துறை

சீர் பிரித்து :-

கூத்து ஆடும் கோன் இடக் கூறாளைக் கோழிக் கொடி உடையோன்
ஆத்தாளை ஆழி வாழ் ஆழியான் அன்பு இளை அந்தரியைக்
காத்து ஆளக் காருவா காணக் கனி நிலா காது அணியை
ஈந்(த்)தாளை ஈடில் இறைவியை ஏத்து ஆழ்ந்து இசை இதுவே

 

பொருள் :-

ஆடல்வல்லான் இடப் பாகத்தவளை , கோழிக்கொடி கொண்ட முருகனின் அன்னையை, பால் ஆழிவாழ் நாராயணன் அன்பு தங்கையைக், (தனது பக்தரைக்) காத்தாள அமாவாசை தினம் முழு நிலா காணும் படி தனது காதணியை ஈந்த , ஈடில்லா இறைவியை ஏத்து அந்நிலையில் ஆழ்ந்து இதுவே இசையாம்
 

 

படம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி