வெள்ளி, 14 ஜூன், 2024

கோபமும் நல்ல குணம் வெண்பா

அறத்தை நிலைநாட்ட வம்புவியைக் காக்க
மறத்தின் வெளிப்பாடாய் வந்தால் - பிறருரைக்குஞ்
சாபமுங் கண்டுகொளாத்  தாரணிக்கா தாம்பணிந்தாற்
கோபமும் நல்ல குணம் 

 சீர் பிரித்து

அறத்தை நிலைநாட்ட அம்புவியைக் காக்க
மறத்தின் வெளிப்பாடாய் வந்தால் - பிறர் உரைக்கும்
சாபமும்  கண்டு கொ(ள்)ளாத்  தாரணிக்கா(க) தாம் பணிந்தால் 
கோபமும் நல்ல குணம் 

பொருள் :-

அறத்தை நிலை நாட்டவும் அழகிய புவியைக் காக்கவும் 

வீரதத்தின் வெளிப்பாடாகதோன்றினால் , பிறர் உரைக்கும் சாபத்தையும் கண்டு கொள்ளாது உலகிறக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டால் 

 

கோபம் என்பது நல்ல குணமேயாம்  


"கோபமும் நல்ல குணம்" என்ற ஈற்றடிக்காக எழுதிய வெண்பா


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி