வியாழன், 27 ஜூன், 2024

திருச்செந்தூர் கட்டளைக்கலித்துறை

ஈரா றணிதோள னேறூரா னேறின் விசயபுரஞ்
சீரா யலைமோதுந் தீராப் பிறப்பிறப் பென்றுழலும்
பேரா பிணிபோக்கிப் பேறா யணைக்கும் பிரானுறையுந்
தீரா வினைவலி தீர்த்தருள் செந்தூர் திருத்தலமே



ஈராறு அணி தோளன் ஏறு ஊரான் ஏறின் விசயபுரம்
சீராய் அலை மோதும் தீரா பிறப்பு இறப்பு என்று உழலும்
பேர் ஆ பிணி போக்கி பேறாய் அணைக்கும் பிரான் உறையும்
தீரா வினை வலி தீர்த்து அருள் செந்தூர் திருத்தலமே

ஈராறு அணி தோளன் - 12 அழகிய தோள்களை உடைய
ஏறு ஊரான் ஏறு - விடையை வாகனமாக கொண்ட ஈசனின் இளைய காளை
விசயபுரம் - ஜெயந்திபுரம் - திருச்செந்தூர்
பேர் ஆ - எணிக்கையில் மிகுந்த உயிர்கள்  

பொருள் கோண்முறை

ஈராறு அணி தோளன் ஏறு ஊரான் ஏறின்
சீராய் அலை மோதும் விசயபுரஞ்
தீரா பிறப்பு இறப்பு என்று உழலும்
பேர் ஆ பிணி போக்கி பேறாய்
அணைக்கும் பிரான் உறையும்
தீரா வினை வலி தீர்த்து அருள் செந்தூர் திருத்தலமே 

படம்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி