படைப்பார் படைக்கப் படைப்பார் படைப்பார்
படிப்பார் படிக்கப் பிடிப்பார் - படைப்பார்
படைப்பார் படைப்பாள் படைப்பாய்ப் படைக்கப்
படைப்பார் படைப்பார் படைப்பு
#வெண்பா
படைப்பார் படைக்கப் படைப்பு ஆர் படைப்பார் ?
படிப்பார் படிக்கப் பிடிப்பு ஆர் ? படைப்பார்
படைப்பு ஆர் படைப்பாள் படைப்பாய்ப் படைக்கப்
படைப்பார் படைப்பார் படைப்பு
படைக்கும் கடவுளான பிரமன் படைப்பதற்கு அப்படைப்பாற்றலை படைப்பது யார்?
படிப்பவர்கள் படிக்க பிடிப்பாய் ( பற்றுக்கோடாய்) இருப்பது யார்?
படைக்கும் கலைஞர்களான தமது ஆர் ( நிறைவான) படைப்பை படைப்பவளான சரஸ்வதிக்கு (முதல் இரண்டு அடிகளுக்கு படைப்பவளான சரஸ்வதி என்பதே பதிலாக அமைகின்றது) படைப்பாய்ப் படைக்கத் தானோ ( படையலாக அர்ப்பணிக்கத் தானோ)
பிரமன் தமது படைப்பான உயிரினங்களைப் படைத்தார்
Who gives power to the creator God Brahma? Who gives grace to the people interested in learning? Does the creator God Brahma create his creation (beings) for them to be creator artists themselves and submit their fulfilled works as an offering to Goddess Saraswathi?It is she who is the power behind his creation is indicated here.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக