செவ்வாய், 11 ஜூன், 2024

செவ்வாயிற் செவ்வேள் முருகு நாம வெண்பா

முருகனை யேத்த முராரி புராரி
திருவுமை வாணி திசைமுகன் சேர்ந்தே
யொருங்க  ரருள்வ ருவந்து மறவேந்
தருவாய்த் திகழு முருகு

 

முருகனை ஏத்த முராரி புராரி 

திரு உமை வாணி திசைமுகன் சேர்ந்தே 

ஒருங்கு அருள்வர் உவந்து மறவேம் 

தருவாய்த் திகழும் முருகு 

முருகனை ஏத்தினால் (முருக எனும் நாமம் கொண்டு) அதில் உள்ள 'மு' - முகுந்தனையும், 'ரு' - உருத்திரனையும் ,   'க' கமலனையும் குறிக்கும் 

அம்மும்மூர்த்திகள் தனது சக்தியான பத்தினகளுடனே எப்போதும் திகழ்வாதால் இலக்குமி உமை கலைவாணியிம் இந் நாமத்துள் அடக்கம் என்பதாம் ஆதலால் அவ்வாறு தெய்வங்களும் முருகா என்றழைக்க நம்மை உவந்து அருள்வார்கள் ஒருசேர ,  ஆதலால் நாம் என்றும் மறவோம் கற்பதருவாய் விளங்கும் முருகை!

படம்

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி