செவ்வாய், 11 ஜூன், 2024

செவ்வாயிற் செவ்வேள் வெண்பா

பூவும் பழமும் புனைவேளைக்  கண்டுவக்க
நாவு சிறக்காதோ நாயேற்குஞ் - சேவற்
கொடியுஞ் சிகண்டியுங் கூற்றழிக்கும் வேலு
மிடைவிடா தேத்துவதே பாங்கு

 

 

பூவும் பழமும் புனை(யும்) வேளைக் கண்டு உவக்க
நாவு சிறக்காதோ நாயேன்(கும்)  சேவல்
கொடியும் சிகண்டியும் கூற்று அழிக்கும் வேலும்
இடைவிடாது ஏத்துவதே பாங்கு
 

சிகண்டி - மயில் 

படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி