வியாழன், 20 ஜூன், 2024

திருவரங்கத்து வெண்பா

அரங்கந் துயிலு மரவணையா னேரில்
திருபார் மகளுடன் சேவித் - தரங்கத்
துறையு முடையவர் தாமான மேனி
முறைகாண வைகுந்தம் வை
#வெண்பா

 



நிகரற்ற, ஶ்ரீ தேவி பூ தேவி சமேதராக அரவணைமேல் துயிலும் பெருமானைச் சேவித்தரங்கத்தில் என்றும் உறையும் இராமானுசரையும் காண  வையகமே வைகுந்தமாம்

 

 

 

 

படம்படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி