தலைபத்துத் தத்திவிழ தானவனைத் தாக்கித்
தலைவிக்கா தாங்கி தனிமை - தலைமகனாய்
தந்தைசொல்லைத் தட்டாத் தனிமகனாந் தாசரதி
தந்தநெறி தாங்கு தலை
#வெண்பா #முற்றுமோனை
விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும் பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக