வெள்ளி, 21 ஜூன், 2024

அருணகிரிநாதர் புகழ்மாலை

சந்தத் தமிழினிற் சங்கத் தமிழினிற் சான்றுரைக்க
வந்திப் பகலென வந்தித் தளிபெற மாண்பளித்துக்
கந்தக் கடவுளி னன்புக் குழுந்தை யருணகிரி
யிந்தப் பொடியனி னின்பத் துதியுனை யேற்றருளே

#கட்டளைக்கலித்துறை

படம்

அருணிறை கொண்ட வருணகிரி பாட்டிற்
பொருணிறை கண்டு பொலியத் - தெருணிறை
வாய்க்கு மனநிறை வாகுங் குருபதம்
வாய்க்கும் வனப்பன்றோ வாழ்வு
#வெண்பா

வாழ்விற் கேற்ற நெறியினை வழங்குந்
தாழ்விலா துயர வுறுதுணை யாகு
மின்ப வழியி லிறைகழ லளிக்கு
மன்பே யென்றும் விதைக்கு
மருமருந் தாவ தருணகிரி புகழே
#ஆசிரியப்பா

புகழ்பாடிப்  பொருடேடி யலைவேனோ
     புறவாழ்வின் மயலாலே யுனைமறந்து
புகழ்பாடிப்  பொருடேடி யலைவேனோ
     புதுவாழ்விற் குடியேறு மனைபோல
புகழ்பாடிப்  பொருடேடி யலைவேனோ
     புனனாடு கயல்போல பிரியாது
புகழ்பாடி  யுனைநாட வருள்வாயே
     யிகவாழ்விற்  பரங்காட்டும் பெருமாளே  
 
அறுசீர் விருத்தம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அங்கிசேர் அறுசீர் மண்டிலம்

அங்கிசேர் பொறியா முக்கண்           அங்கிசேர் சான விக்கண்  தங்குசீர் கிரண மாறுஞ்          சண்முகத் தேவாய்த் தோன்று  மங்குதீர் நிச்ச லன்றன்   ...