திங்கள், 10 ஜூன், 2024

மருதமலை முருகன் விருத்தம்

செங்கணேற்றவர் திங்களாற்றவர் மங்கையேற்றவ ரடியாரின்
செங்கணேற்றவ ரங்கமேற்றவழ் பொங்கராபுனை குருநாதா
சிங்கவேற்றவ ணங்கைமேற்றவள் செங்கைவீற்றருள் வடிவேலா
வெங்களாற்றமை யுன்னையேத்தவே கொங்குகோட்டுறை பெருமாளே

#கலிவிருத்தம் 

 

 



செங்கண் ஏற்றவர் திங்கள் ஆற்றவர் மங்கை ஏற்றவர் அடியாரின்
செங்கண் ஏற்றவர் அங்கம் மேல் தவழ் பொங்கு அரா புனை குருநாதா
சிங்க ஏற்றவள் நங்கை மேல் தவள் செங்கை வீற்று அருள் வடிவேலா
எங்கள் ஆற்று அமை உன்னை ஏத்தவே கொங்கு கோட்டு உறை பெருமாளே 


படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி