திங்கள், 3 ஜூன், 2024

தாயார் கட்டளைக் கலித்துறை

வாணேர் விழியாள் வனப்பின் மயங்கி வினைப்பயனாய்ப்
பூணார் முலையாள் பொலிவிற் றிளைத்துப் புலமைமிகு
மாணா மதுர மொழியா ளவடன் மகத்துரைக்க
வாணா ளடையு மலர்த்தாள் பணிவா மறைப்பயனே

#கட்டளைக்கலித்துறை

 

வாள் நேர் விழியாள் வனப்பில் மயங்கி வினைப் பயனாய்ப்
பூண் ஆர் முலையாள் பொலிவில் திளைத்துப் புலமைமிகு
மாண் நா மதுர மொழியாள் அவள் தன் மகத்து உரைக்க
வாழ் நாள் அடையும் மலர்த்தாள் பணிவாம் மறைப் பயனே

படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி