செவ்வாய், 2 ஜூலை, 2024

செவ்வாயிற் செவ்வேள் கட்டளைக் கலித்துறை

அம்மானை யேந்து மனல்விழி யார்தந்த வாறுமுகா
வம்மானைத் தேடி யருங்கான மோடு மணன்மருகா
வம்மானைத் தேடி யருங்கான மோடு மணவழகா
வம்மானைப் போலே யருங்காதற் கொண்டா யடியவர்க்கே

 

 

அம் மானை ஏந்தும் அனல் விழியார் தந்த ஆறுமுகா
அம் மானைத் தேடி அரும் கானம் ஓடும் அ(ண்)ணல் மருகா
அம் மானைத் தேடி அரும் கானம் ஓடும் மண அழகா
அம்மானைப் போலெ அரும் காதல் கொண்டாய் அடியவர்க்கே

 

அழகிய மானைக் தனது கரத்தில் ஏந்தும் அனல் விழியாரான சிவ பெருமான் அளித்த ஆறுமுகனே
அழகிய மானைத் தேடி காட்டில் ஓடிய அண்ணல் இராமரின் மருகனே அவரைப் போலவே நீயும்
அழகிய மான் போன்ற வள்ளியைத் தேடி காட்டில் துரத்திய மண அழகனே
உனது அம்மானான திருமலைப் போலவே நீயும் உனது அடியார்களின் மீது அரிய காதல் கொண்டவன் அன்றோ

 

படம்படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி