புதன், 24 ஜூலை, 2024

சேந்தன் விருத்தம்

சேந்தா குமரா முருகா மலைவாழ்
வேந்தா விழிவேற் குறமாதின்

காந்தா சமரா புரிவா ழரசே
காரார் மயிலே றுமைபாலா

சூழ்ந்தா நிரையார் குழலான் மருகா
வாழ்ந்தா லுனையே வுயிராகச்

சார்ந்தா ருனதா ரடியா லடைவார்
தேர்ந்தா யுளொடா றுயர்வீடே

எழு சீர் விருத்தம் 



சேந்தா குமரா முருகா மலை வாழ் வேந்தா விழி வேல் குற மாதின்
காந்தா சமராபுரி வாழ் அரசே
கார் ஆர் மயில் ஏறு உமை பாலா
சூழ்ந்து ஆனிரை ஆர் குழலான் மருகா வாழ்ந்தால் உனையே உயிராகச் சார்ந்தார் உனது ஆர் அடியால் அடைவார் தேர்ந்து ஆயுளொடு ஆறு உயர் வீடே

சேந்தா குமரா மலை வாழ் அரசே வேல் போன்ற விழியை உடைய வள்ளியம்மைக்கு  நாதா , திருப்போரூர்  வாழ் அரசே  அழகிய கருமயிலை வாகனமாகக் கொண்ட உமை பாலனே ஆநிரை எப்போதும் சூழ்ந்து உள்ள அழகான புல்லாங்குழல் ஊதுபவனின் ( கண்ணனின் ) மருகனே, வாழ்ந்தால் உன்னையே உயிராக எண்ணி வாழும் அடியார்கள் , உனது அழகான திருவடியின் மகிமையால் தேர்ந்த ஆயுளும் அதன் பின்னர் வீடு பேறும் அடைவார்கள்! 

படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி